ஸ்டார் ஃபிட்னெஸ்: தியானம்... நெய்... தேங்காய் எண்ணெய்க் குளியல்...

நித்யா மேனனின் நிஜமான ஃபிட்னெஸ்!

‘‘தியானம் பண்ணுவது மனநிலையை ஒருநிலைப்படுத்துவதற்கான முதல்படி. அதோடு சேர்ந்து யோகாவும் செய்தால் உடல்-மனம் இரண்டுமே சீராக வேலை செய்யும். தினம் காலை ஒருமணி நேரமும், மாலை இரண்டு மணிநேரமும் ஆசனங்களைச் செய்வேன். ஒவ்வொரு முறையும் நான்கு ஆசனங்கள் என்ற விகிதத்தில் ஒரு நாளைக்கு எட்டு ஆசனங்கள் செய்வதை வழக்கமா வெச்சுருக்கேன். ஜிம் வொர்க் அவுட் மற்றும் சைஸ் ஸீரோவில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்தமாதிரி இருந்தாதான் உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னு சொல்றதே ஃபிட்னெஸ் மீது இருக்கும் தவறான பிம்பம்தான்.

ஷூட்டிங் இருக்கும்போதும் பாரம்பர்யமான உணவுகளைத்தான் சாப்பிடுவேன். நம்ம அம்மா அப்பா அவங்க காலத்துல எந்தமாதிரியான உணவு முறைகளைப் பின்பற்றி வந்தாங்களோ, அந்த மாதிரியான உணவுகளையே நானும் சாப்பிடறதை வழக்கமா வெச்சிருக்கேன். அதாவது சிறுதானியங்கள் மற்றும் நவதானியங்கள்ல செய்த உணவு வகைகள்தான் என் சாய்ஸ். அசைவ உணவு வகைகளுக்கு குட் பை. பாக்கெட் உணவுகளைத் தொடவே மாட்டேன். இனிப்பு வகைகளில்கூட இந்திய இனிப்பு வகைகளை மட்டும்தான் சாப்பிடுவேன். இன்னும் தெளிவா சொல்லணும்னா, சுவையைக் கூட்டுற ஒரே பொருளா நெய்யை மட்டும்தான் உபயோகிக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick