ஜீரோ ஹவர்! - 5

ஹெல்த்

ம்மில் சிலர் இருக்கிறார்கள். வாக்கிங் போகவேண்டும் என முடிவெடுத்ததும் முதல் வேலையாகக் கடைக்குப் போய் ஒரு ட்ரெட் மில்லை வாங்கிவந்து வீட்டில் போட்டுவிடுவார்கள். யோகா பண்ண வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் யோகா பேன்ட்ஸ், யோகா மேட், யோகா ஷூ என எல்லாமே தயாராகிவிடும். சைக்கிளிங் போகவேண்டும் என நினைத்ததும் முதல் ஆளாகச் சென்று இருபதாயிரத்துக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி வாசலில் நிறுத்திவிடுவார்கள். ஜிம்முக்குப் போகவேண்டுமா... உடனே அருகில் இருக்கிற உடற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு சந்தாவைக் கட்டிவிடுவார்கள். நமக்கெல்லாம் ஒரு நினைப்பு இருக்கிறது. நிறைய செலவழித்தாலே நிறைய சாதித்துவிட்ட உணர்வு! ஆனால், அது அப்படி எப்போதும் இருப்பதில்லை.

லட்சக்கணக்கில் செலவழித்துப் படிக்கவைக்கிற குழந்தைக்கு ஒருமணிநேரம் செலவழித்துக் கதை சொல்ல முடியாதவர்கள் தானே நாமெல்லாம்! நிறைய செலவழிப்பதால் மட்டுமே எல்லாம் கிடைத்துவிடாது. யோசித்துப் பார்த்தால் இப்படி அதிகம் செலவழித்து ஆரம்பிக்கிற எல்லா புதிய நல்ல பழக்கங்களும் பெரும்பாலான நேரங்களில் வீழ்ச்சியையே சந்திக்கும். யோகா மேட் மூலையில் முடங்கிக் கிடக்கும். ட்ரெட் மில்லில் உள்ளாடைகள் காயும். பந்தாவாக ஜிம்முக்கு கட்டிய சந்தா வீணாய்ப்போகும். ஏன் இப்படி ஆகிறது?

எந்தப் புதிய நற்பழக்கமாக இருந்தாலும் அதை ஆரம்பிக்கத் தேவை புதிய ஷூக்களும் யோகாமேட்களும் அல்ல. நீடித்த ஆர்வம் மட்டும்தான். அது எந்தக் கடையிலும் கிடைக்காது. கோடி ரூபாய் கொடுத்தாலும் அதைப் பெறமுடியாது. அது உள்ளுக்குள் உருவாக வேண்டிய ஊற்று.   எதையுமே ஆரம்பிக்கும்போது நமக்குள் அட்ரீனலின் அளவுக்கதிகமாகச் சுரந்து உற்சாகம் ஊற்றெடுக்கும். புதிதாகக் காதலில் விழுந்தவர்களைப்  பார்த்திருக்கிறீர்களா... நாள் முழுக்க போனில் பேசிக்கொண்டேயிருப்பார்கள். புதிதாக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறவர்களும் அப்படித்தான். நாளைக்கே எல்லா சாதனைகளையும் செய்துவிட வேண்டும் எனத் துடிப்பார்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick