தடுமாற்றமா? தலைச்சுற்றலா? - காதுகளைக் கவனியுங்கள்!

காது கேளாமைக்கான அறிகுறிகள் சில நேரங்களில் வித்தியாசமாக இருக்கலாம். ஆரம்பநிலையிலேயே அறிகுறிகளை உணர்ந்தால் ஆபத்துகளைத் தவிர்க்கலாம். அப்படிச் சில அறிகுறிகளை அறிவோமா?

* காதுக்குள் `ஙொய்...’ என்று ஒரு சத்தம் வந்து வந்து போகிறதா..? அது, காது கேளாமைக்கான ஆரம்ப அறிகுறி. தனியறையில், இரைச்சலில்லாத சூழலில் இருக்கும்போது அதிகமாக, அடிக்கடி, தொடர்ந்து இப்படி காதுக்குள் சத்தம் கேட்டால், உங்கள் காது நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

காதுகள் பாதிக்கப்படுவதில் மிக முக்கியப் பங்காற்றுபவை ஹெட்போன்கள். அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு எட்டிலிருந்து பதினைந்து நிமிடங்களுக்கு அதிக வால்யூமில், ஹெட்போனில் பாடல் கேட்டால், நிரந்தரமாகக் காது கேட்கும் திறன் பறிபோக வாய்ப்பிருக்கிறது. ஹெட்போனை எடுத்த பிறகும்கூட காதுகளில் சத்தம் கேட்கிறதா..? நீங்கள் அதிகச் சத்தத்தில் பாடலைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதற்கான குறிப்பு அது. `சத்தத்தைக் குறைக்கும் ஹெட்போன்களை’ (Over the ear noise cancelling Headpohones) வாங்கிப் பயன்படுத்துவது காதுகளுக்குப் பாதுகாப்பு. ஏனென்றால், இவை ட்ராஃபிக் சத்தம் போன்ற சுற்றுச்சூழல் சத்தங்களைக் குறைத்துவிடும். அதனால், வால்யூமை அதிகம் வைத்துக் கேட்கவேண்டிய அவசியம் ஏற்படாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick