நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 11

குடும்பம்

தாய், குழந்தைக்குப் பால் ஊட்டுவதால் ஏற்படும் சத்துக்குறைபாட்டைச் சமன்செய்ய நிறைய உண்பது அவசியமா? நிச்சயமாக இல்லை. சரியான உணவைத் தேர்வுசெய்து உண்ண வேண்டுமா என்றால் அதுவும் கூட முக்கியமல்ல. அந்தத் தாய் வழக்கமான சூழலில் எதை உண்பாரோ அதை உண்டாலே போதுமானது.

இயற்கைப் பண்பு கெடாத உணவு வகைகளை மட்டுமே எடுத்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது. பாக்கெட் செய்யப்பட்ட, ரசாயனங்கள் கலந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உணவுப் பற்றாக்குறை நீடித்து வந்த காலத்தில் நமது மரபில் கூறப்பட்ட சில உணவு வகைகள் பிரசவ சோர்வு நீங்குவதற்காகக் கூறப்பட்டவை தானேயன்றி பால் சுரப்புக்காக அல்ல.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick