ஸ்டார் ஃபிட்னெஸ்: ஆவி பிடிப்பேன்... அடிக்கடி டிராவல் பண்ணுவேன்... அப்படியே சாப்பிடுவேன்...

பார்வதி நாயரின் பாசிட்டிவ் ஃபிட்னெஸ்

‘என்னை அறிந்தால்’ படத்தின்மூலம் மலையாளத்திலிருந்து தமிழுக்குக் கரையேறியவர் நடிகை பார்வதி நாயர். இந்த ஆண்டுத் துவக்கத்தில் வெளியான ‘நிமிர்’ படத்தின்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். தற்போது தெலுங்குப் படங்களிலும் பயங்கர பிஸி. தொடர்ந்து பல மொழிகளில் ஹிட் அடிக்கும் பார்வதியிடம் அவரது ஃபிட்னெஸ் பற்றிக் கேட்டோம்.

‘‘தினமும் வொர்க்-அவுட் பண்ணனும்னு அவசியம் கிடையாது. தினமும் 8 மணிநேரம் தூங்கணும். காலையில எழுந்ததும் சூரிய நமஸ்காரம் மற்றும் ஆசனங்கள் செய்வது அவசியம். ஒருநாள்ல குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது காலை வெய்யில் நம்ம உடம்புல கட்டாயம் படணும். ஜிம்ல உடற்பயிற்சி செய்ய முடியாத நாள்கள்ல, ஒரு மணிநேரம் ஜாகிங் போவேன். எனக்குக் கடினமான உடற்பயிற்சி செய்து ஃபிட்னெஸைப் பராமரிப்பதில் விருப்பமில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick