குறையொன்றும் இல்லை - லவ் யுவர் பாடி | No worries, be confident with your body and beauty - Doctor Vikatan | டாக்டர் விகடன்

குறையொன்றும் இல்லை - லவ் யுவர் பாடி

குறிஞ்சி, மனநல மருத்துவர்

`உனக்கு மூக்கு லேசா வளைஞ்சிருக்கு’ என்று யாராவது சொல்லிவிட்டால் அதை நினைத்து தூக்கத்தைத் தொலைத்தவர்கள் பலர் உண்டு. ‘உன் முகத்துல ஏன் இவ்ளோ பிம்பிள்ஸ் இருக்கு?’ என்ற வார்த்தையைக் கேட்டதும் முகத்தில் க்ரீம், பவுடர், மஞ்சள் என விதவிதமாகத் தடவி கண்ணாடியே கதியெனக் கிடப்பார்கள் சிலர். தலைமுடி பிரச்னை இருப்பவர்கள், சதா சர்வகாலமும் அதுபற்றிய தகவல்களைத் திரட்டிக்கொண்டே இருப்பார்கள். தம்மை நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என ஒருவிதத் தாழ்வுமனப்பான்மையும் இவர்களுக்கு இருக்கும். இவற்றையெல்லாம் ‘ஒருவகை மனநோய்’ என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

``சமூகம் சொல்லித்தரும் விஷயங்களில், மிகவும் மோசமானது உடல் சார்ந்த விமர்சனங்களே. உடலின் அமைப்பை வைத்து ஒருவரைக் கேலி செய்வதும் அவரது தோற்றத்தை வைத்து சம்பந்தப்பட்டவரின் குணத்தை முடிவுசெய்வதும் அவர்களுக்கு எவ்வளவு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. இதுபோன்ற சூழலில் தமது உடல் அமைப்பின்மீது திருப்தி இல்லாமல் அதுபற்றியே நினைத்துக்கொண்டிருப்பார்கள், சிலர். இத்தகைய நிலை, `பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர் (Body Dysmorphic Disorder)’ எனப்படுகிறது. இந்தப் பிரச்னை வயது வித்தியாசமின்றி பலரையும் பாதிக்கிறது” என்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி. இதுபற்றி விரிவாகப் பேசினார் அவர்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick