இறந்த பிறகும் வாழும் உடல்!

``மீன் செத்தாக் கருவாடு! நீ செத்தா வெறுங்கூடு!’’ என்பது கண்ணதாசனின் வைரவரிகள். மீன்கள் இறந்தபிறகும் அவை கருவாடு என்ற உணவுப்பொருளாகி மனிதனுக்குப் பயன்படுகின்றன. ஆனால், மனிதன் இறந்தால் உடல் பயனற்றுப் போய்விடுகிறது. அதனால்தான் கண்ணதாசன், ‘வாழும்போதே சமூகத்துக்குப் பயன்படக்கூடிய செயல்களைச் செய்யுங்கள்' என்று அந்தப் பாடலின் வழியாக உணர்த்தினார். ஆனால், இன்று நிலை மாறிவிட்டது. மனிதனின் இறப்புக்குப் பிறகும் சமூகத்துக்குப் பயன்படலாம் என்பதை உறுதி செய்திருக்கிறது நவீன மருத்துவம். ரத்ததானம், கண்தானம், உறுப்பு தானம் வரிசையில் முழு உடல்தானமும் இணைந்திருக்கிறது.

 ஒருவரது மரணத்துக்குப் பிறகு, அவரின் உடலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்குப் பயன்படும் வகையில் தானம் செய்யலாம். அதை `உடல்தானம்' என்கிறோம். மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறதோ, இல்லையோ... ஆனால், அடுத்த தலைமுறை மருத்துவர்களுக்குப் பயன்படும்விதமாக உடல்தானம் செய்வது மகத்தானது. எனவே, பலருக்கு உடல்தானம் செய்வதில் தயக்கம் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick