முடக்கிப்போட்ட விபத்து... மீட்டெடுத்த பயணக்காதல்...

வாழ்க்கையை நேசிக்கும் வடிவேலு!

திகாலை எழுந்ததும் அருகில் இருக்கும் மைதானத்தில் சைக்கிளிங், காலை உணவு முடித்ததும் அலுவலகம் செல்லுதல், அதைத் தொடர்ந்து அலுவலகப் பணியாக நாள் முழுவதும் பல கிலோமீட்டர்கள் டூவீலரில் சுற்றும் மார்க்கெட்டிங் வேலை, இடையில் சிறிய விடுப்பு கிடைத்தால் கொடைக்கானல், குற்றாலம் என பைக் ரைடு, பெரிய விடுப்பு கிடைத்தால் காஷ்மீர், ஹிமாலயன் என மலைப்பகுதிகளுக்கு பைக் ரைடு போவதைத் தன்னுடைய வாழ்க்கைமுறையாக வைத்திருக்கிறார் மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த இளைஞர் வடிவேல்.

ஏற்கெனவே பைக் ரைடில் சாதனை செய்ததற்காக லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் சாதனையாளராகப் பதிவுபெற்றுள்ளார். அடுத்து உலக அளவில் பைக் ரைடில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற துடிப்போடு இருக்கும் வடிவேலுக்கு, முட்டிக்குக் கீழே கால் அகற்றப்பட்டு, செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது என்பதுதான் வேதனையான விஷயம்.

``அப்படியெல்லாம் வேதனைப்படாதீங்க. ஒரு காலை இழந்தவன் என்று அனுதாபத்தோடு யாரும் என்னைப் பார்க்க வேண்டாம். அது எனக்குப் பிடிக்காது. இதனால் கிடைக்கும் சலுகை, இரக்கம், ஆலோசனை எதுவுமே எனக்குத் தேவையில்லை. நான் எல்லோரையும்போல இயல்பானவன்தான். காலை இழந்த நானே அதை மறந்து இயங்கிக்கொண்டிருக்கும்போது, மத்தவங்க அதைச் சுட்டிக்காட்டிக்கிட்டே இருப்பதுதான் மனச்சோர்வைத் தருது. சாதனை செய்ய என்னை ஊக்கப்படுத்துங்க’’ - வேண்டுகோளுடன் உற்சாகமாக ஆரம்பிக்கிறார் வடிவேலு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick