அச்சம் தவிர் - Enochlophobia

“வேங்கையம் மவன் ஒத்தையில நிக்கேன்”- ‘காலா’ பட ட்ரெயிலரில் சூப்பர் ஸ்டார் பேசும் வசனம் இது. அவர் தனியே நிற்பதற்குக் காரணம் வேறு. ஆனால், சிலர் கூட்டத்தைக் கண்டு பயந்து இப்படித் தனியே நிற்பதுண்டு. அவர்களுக்குக் கூட்டம் என்றாலே அலர்ஜி; பயம். அந்தப் பயத்துக்குத்தான் Enochlophobia என்று பெயர். அதாவது அதிக நபர்கள் ஒன்றாகக் கூடியிருக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் ஏற்படும் பயம்.

கூட்டம் என்பது இவர்களுக்கு அந்நியர்களால் சூழப்பட்ட இடமாகத் தோன்றும். கூட்டத்தில் தாம் தொலைந்து போய் விடுவோம் என்ற பயமும், கூட்டத்தில் நசுங்கி விடுமோ என்கிற பயமும் அதிகம் இருக்கும். ஆண்களைவிடப் பெண்களே இந்த நோயால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். அதிகப்படியான இரைச்சல் பிடிக்காதவர்கள் மற்றும் கூச்ச உணர்வு உள்ளவர்கள் கூட்டத்தை விட்டு விலகி இருக்க முயற்சி செய்வதுண்டு. கிருமிகள் தொற்றும் அபாயம் உள்ளதாகக் கருதுபவர்களும் கூட்டத்தைவிட்டு விலகி இருக்க நினைப்பார்கள். சிலர் தாழ்வு மனப்பான்மையின் காரணமாகக் கூட்டத்தைத் தவிர்க்கின்றனர். பாதிப்புக்கு இதுதான் காரணம் என எதுவும் வரையறுக்கப்படவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick