ஜீரோ ஹவர்! - 6 | Zero Hour: Exercises and food habits - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஜீரோ ஹவர்! - 6

துரை ஹைகோர்ட் அருகில் அந்த டீக்கடை இருக்கிறது. அதிகாலையில் வாக்கிங் போகிற அத்தனைபேரையும் அங்கே பார்க்கலாம். விதவிதமான உடைகளில் கேன்வாஸ் ஷுவும் அழகிய தொப்பையுமாக மூச்சிறைக்க வந்து கடைவாசலில் நிற்பார்கள். அவர்களுக்காகவே அங்கே ஆவிபறக்க சூடான டீயும், சுடச்சுட வடை, பஜ்ஜி, போண்டாக்களும் காத்திருக்கும். வாக்கிங் முடித்த கையோடு அத்தனையும் உள்ளே தள்ளிவிட்டுத்தான் வண்டிகள் வீடுதிரும்பும். `ஆமாங்க, ஆமாங்க... இந்த மதுரக்காரய்ங்களே இப்படித்தான்’ என்று சிலுப்பிக்கொள்ளாதீர்கள் அன்பரே... கோவை ரேஸ்கோர்ஸ் பக்கமும் மெட்ராஸ் மெரினா பக்கமும்கூட போண்டாக்கடைகள் இருக்கின்றன... அங்கும் வாக்கிங் மன்னர்கள் வாய்நிறைய சிற்றுண்டிகளோடுதான் தங்கள் உடற்பயிற்சியை முடிக்கிறார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick