நிலம் முதல் ஆகாயம் வரை... காந்த சிகிச்சை

ஹெல்த்யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்

காந்த சிகிச்சை வலியில்லாத எளிய சிகிச்சை. வேறுபட்ட சக்திகளைக்கொண்ட காந்தங்களை சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைப்பதன் மூலம் நோய்களைக் குணப்படுத்துவார்கள்.   நமது உடலில் நேர்மின் அயனி (Positive ion), எதிர்மின் அயனி (Negative ion) என இரண்டு சேனல்கள் உள்ளன. காந்த சிகிச்சை அளிக்கும்போது, காந்தத்தின் சக்தி இந்த அயனிகளுடன் இணைக்கப்படுவதால் மின்வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

காந்தத்தை நேரடியாகப் பயன்படுத்தாமல், நாம் அன்றாடம் பயன்படுத்துகிற பொருள்களில் அதை உள்ளிட்டுப் பயன்படுத்துகிறார்கள். நம் உடலில் அனைத்துப் பாகங்களிலும் அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன. அந்த இடங்களில், காந்தத்தால் ஆன ஆபரணங்களை அணிந்தால் குறிப்பிட்ட நோய்கள் குணமாகும். குறிப்பாக, பெண்கள் அணியக்கூடிய கம்மல், வளையல், மெட்டி போன்ற ஆபரணங்கள் காந்தத்தால் செய்யப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick