நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 18

போப்பு, மருத்துவ எழுத்தாளர்குடும்பம்

ரண்டு மாம்பழம், இரண்டு டம்ளர் பால்... இவற்றை மட்டுமே தன்னுடைய ஒரு முழுநாளுக்கான உணவாக உட்கொள்பவர்கள் பலரை எனக்குத் தெரியும். அப்படி உட்கொள்பவர்களால் அன்று முழுவதும் மிகுந்த சுறுசுறுப்புடன் இருக்க முடிவதையும் கவனித்திருக்கிறேன்.

நார்த்தன்மை மிகுந்த மாம்பழத்தில் காரச்சத்து நிறைந்திருக்கிறது. உயிர்ச் சத்துகளும், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு போன்ற நுண் சத்துகளும் கணிசமாக இருப்பதால், நாம் வெறும் மாம்பழத்தை மட்டுமே ஒரு நாள் அல்லது ஒரு நேர உணவாக உட்கொண்டால், அது தலைமுடி முதல் பாத நகங்கள் வரை அனைத்தையும் செழுமையாக வைத்திருக்கும். இன்றைய வாழ்க்கை முறையாலும், இங்கு நிலவும் புறச்சூழலாலும் உடல் மிக எளிதில் வெப்பமடைந்துவிடுகிறது. உடலில் வெப்பம் அதிகரிக்கும்போதெல்லாம் தலைமுடி துவண்டு போவதையும், சருமம் வறண்டு போவதையும் நாம் உணரலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick