எடை எவ்வளவு கூடலாம்?

சீஜா, அரசு மகப்பேறு மருத்துவர்ஹெல்த்

பெண்கள் கர்ப்பம் தரித்த முதல் நாளில் இருந்தே கருவின் வளர்ச்சிக்குத் தேவையான விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள். அதன் ஓர் அங்கமாகச் சராசரியாகத் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவைவிட அதிகமாகச் சாப்பிட ஆரம்பிப்பவர்கள் பலர். இதனால் சிலர் மகப்பேறு காலத்தில் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள். ஆனால், அது ஆரோக்கியக் காரணி அல்ல. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்தபட்சம் எத்தனை கிலோ எடை இருக்க வேண்டும்? அதிகபட்சம் எத்தனை கிலோ எடை அதிகரிக்கலாம்? விளக்கங்களைத் தருகிறார்,  மகப்பேறு மருத்துவர் சீஜா.

எடை கூடுவதும் தவறு... குறைவதும் தவறு!

ஒரு பெண் கருவுறும் தருணத்திலும், கர்ப்ப காலத்திலும் சரியான எடையில் இருக்க வேண்டியது அவசியம். கருவுறும்போது, பெண்ணின் சராசரி எடை 50 கிலோ இருக்க வேண்டும். இந்த அளவுகோல் அவரவரின் உயரத்தைப் பொறுத்துச் சற்று மாறுபடலாம். அதுபோல, கருவுற்ற நாள் முதல் கர்ப்ப காலம் வரையிலான ஒன்பது மாதங்களில், கர்ப்பிணிப் பெண் 11 கிலோ வரை எடை அதிகரிப்பது ஆரோக்கியமான அளவுகோல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick