சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த்

ணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கவரப்பட்டுக் காதல்கொண்டு உறவில் இணைவதே ஓரினச்சேர்க்கை. இதற்கும், ஆண்-பெண் உறவுக்கும் பெரியளவில் வேறுபாடில்லை. உணர்வு ரீதியாக இரண்டும் ஒன்றுதான். ஓரினச்சேர்க்கை குறித்து சமூகத்தில் பல தவறான கருத்துகள் உலவுகின்றன. ‘இது ஒரு மனநோய்’, ‘இது இயற்கைக்கு முரணானது’, ‘இவர்களுக்கு ஹெச்.ஐ.வி வரும்’ - இப்படிப் பல கருத்துகள்!

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377, ‘ஓரினச்சேர்க்கை போன்ற இயற்கைக்கு முரணான உடலுறவுகளில் ஈடுபடுவது குற்றச்செயல், இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனை கொடுக்கலாம்’ என்கிறது. இது, 1857-ம் ஆண்டு இங்கிலாந்து அரசால் கொண்டுவரப்பட்ட சட்டம். அதைத்தான் இன்றுவரை இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இது தொடர்பான வழக்குதான் இப்போது உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick