தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 15வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

காசநோய் நுரையீரலில் மட்டுமே தாக்குவதில்லை என்று பார்த்தோம். சிலருக்கு மூளையிலும் காசநோய் தாக்கலாம். மூளையில் காசநோய் வந்தால் கண்டுபிடிப்பது சற்று சிரமம். ஆனால், கண்டுபிடிக்க முடியாது என்றில்லை. ‘லம்பார் பங்சர்’ (Lumbar Puncture) என்று ஒரு சோதனைமுறை உண்டு. ‘முதுகுத் தண்டுவடத் துளையிடுதல்முறை’ என்று தமிழில் சொல்லலாம். முதுகுத் தண்டுவடத்தில் ஊசியின் மூலம் துளையிட்டு, தண்டுவட நீரை எடுத்து, அதிலிருக்கும் கிருமியை ஆய்வு செய்யவேண்டும். அந்த நீருக்கு ‘சி.எஸ்.ஃஎப்’ (Cerebrospinal Fluid (CSF) என்று பெயர். அந்த நீரில் காசநோயை உருவாக்கும் கிருமி இருக்கும்பட்சத்தில் அதற்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

கால் அல்லது கை மூட்டுகளில் காசநோய் வரலாம். அதைக் கண்டுபிடிக்கவும் வழி இருக்கிறது. ‘ஆர்த்ரோஸ்கோபி’ (Arthroscopy) மூலம் மூட்டில் இருந்து ஒரு சதைத்துண்டை எடுத்து பயாப்ஸி (Biopsy) சோதனை செய்து, காசநோய்க் கிருமி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பிறப்புறுப்பில் கூடக் காசநோய் வரலாம். காசநோய்க் கிருமி உடம்பில் இறங்கிவிட்டால் எங்கெல்லாம் ரத்தம் ஓடுகிறதோ அங்கெல்லாம் தாக்கலாம். தலைமுடி, விரல் நகங்கள்... இந்த இரண்டு பாகங்களுக்குத்தான் ரத்தம் ஓடாது. அதனால் அந்த உறுப்புகளைத் தாக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick