ஆறாவது மாதத்தில் குழந்தைக்கு சத்துமாவுக் கஞ்சி வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 6 | A Guide for First Time Parents - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/08/2018)

ஆறாவது மாதத்தில் குழந்தைக்கு சத்துமாவுக் கஞ்சி வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தனசேகர் கேசவலு குழந்தைகள்நல மருத்துவர்

பிறந்து ஐந்து மாதங்கள் வரை அம்மா மடியில் படுத்துக்கொண்டு கொலுசுக் கால்களை ஆட்டியபடி ‘ங்ஙா’ குடித்துக் கொண்டிருந்த குழந்தை இனி அரிசி, பருப்பு, காய்கறி என்று விதவிதமாக மம்மு சாப்பிடப் போகிறது. குழந்தைக்கு முதல் உணவாக என்னென்ன கொடுக்க வேண்டும்; எப்படிக் கொடுக்க வேண்டும்; என்னென்ன உணவுகளைக் கொடுக்கக்கூடாது; அதற்கு என்ன காரணம்? எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லட்டுமா?

குழந்தை நீர்த்தன்மை உணவான தாய்ப்பாலில் இருந்து திட உணவுக்கு மாறுகிற நேரம், அதன் வாழ்நாளில் மிக மிக முக்கியமானது. ஒவ்வோர் உணவாகத்தான் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.