கூந்தல் பயம்

அச்சம் தவிர்

ன்றைய இளைஞர்களின் நம்பிக்கையை முற்றிலுமாகக் குலைக்கும் விஷயங்கள் குறைவுதான். ஆனால், பல விஷயங்கள் ‘இதற்காகவா’ என ஆச்சர்யப்படுத்தவும் செய்யும். அவற்றில் ஒன்று முடி உதிர்தல். முடி மிகவும் முக்கியமான விஷயம; அழகு சார்ந்த விஷயம். பெரும்பாலான மக்கள் முடி உதிர்வது குறித்துப் பெருங்கவலை கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கில் பணத்தையும் செலவழிக்கிறார்கள். சேட்டோ போபியா (Chaeto Phobia) என்பது முடி உதிர்தலைப் பற்றிய பயம் கிடையாது. முடி என்றாலே பயந்துபோவது. இது அரியவகை போபியாவாகக் கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் விலங்குகளின் ரோமம், மனிதர்களின் முடி, அடர்த்தியான மற்றும் சுருள் முடி என எல்லா வகை முடிகளைக் கண்டும் பயப்படுவார்கள். இவர்களில் சிலர் தங்களின் முடியைத் தொட்டுப் பார்க்கவும், மற்றவர்களின் முடியைத் தொடவும் பயப்படுகிறார்கள். கிரேக்க மொழியில் `Khaite’ என்றால் `அலைபாயும் கூந்தல்’ என்று அர்த்தம். அதிலிருந்தே சேட்டோ போபியா என்ற சொல் உருவானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!