மனசுக்கு ஒரு மாத்திரை!

ஹெல்த்

“இந்த மாத்திரை சாப்பிட்டா கண்டிப்பா தூக்கம் வரும்ல டாக்டர்?” மூன்றாவது முறையாக அதே கேள்வி மருத்துவரின் காதில் விழுந்தது. “கண்டிப்பா வரும்” என்றார் மருத்துவர்.

சொன்னது போலவே அன்று இரவு அந்த நபருக்கு நல்ல தூக்கம். அடுத்த நாளே மருத்துவருக்கு போன் செய்து நன்றி கூறினார்.

பல வாரங்களாகத் தூக்கம் வராமல் தவித்த மனிதரை அந்த மாத்திரை எப்படி ஒரே நாளில் தாலாட்டு பாடித் தூங்க வைத்தது? அப்படி என்ன மாத்திரை அது? அதுனுள்ளே சக்தி வாய்ந்த மருந்து ஏதேனும்? ம்ஹும்ம்... ஆங்கிலத்தில் ‘Sugar Pill’ எனச் சொல்லப்படும் சர்க்கரை கலந்த மாத்திரைதான் அது. உண்மையில், அதனுள்ளே தூக்கத்தை வரவழைக்கும் மருந்துகள் எதுவும் கிடையாது. அப்படி நம் மூளையை நம்ப வைத்துத் தூக்கத்தை வரவழைப்பது மட்டும்தான் அந்த மாத்திரை கொடுக்கப்பட்டதன் நோக்கமே. அதன் பெயர் ‘பிளாசிபோ’ (Placebo). தூக்கமின்மை என்றில்லை, பல்வேறு மனப் பிரச்னைகளுக்கும் பிளாசிபோவைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள். எது பிளாசிபோ, எது உண்மையான மாத்திரை என்பது மருத்துவருக்கு மட்டுமே தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!