நிலம் முதல் ஆகாயம் வரை... - உணவு சிகிச்சை

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்

‘உணவே மருந்து’ என்பதுதான் நம் மரபு. நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பது மட்டுமின்றி, நோய்களைக் குணப்படுத்துவதும் நல்லுணவின் குணம். எந்த உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று முறை வகுத்து, கடைப்பிடித்தனர் நம் முன்னோர். முறையற்ற உணவுப்பழக்கங்கள் நோய்களுக்கு மூலகாரணமாக அமைகின்றன.

இன்று, மரபுகளை மீறி எது எதையோ சாப்பிடுகிறோம். வாழ்க்கைமுறை மாறியதுபோல உணவுமுறையும் மாறிவிட்டது. வயிறு, குப்பைக்கிடங்கைப் போல மாறிவிட்டது. இந்தச் சூழலில், நம் இயல்பை மீட்டெடுக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இயற்கை மருத்துவமானது `உணவு சிகிச்சை’ என்ற முறையைக் கையாள்கிறது. சாத்வீகம், தமசீகம், ராஜசீகம் என்று உணவில் மூன்றுவகைக் குணங்கள் உண்டு. இயற்கையான, பசுமையான காய்கறிகள், பழங்கள், தானியங்களையே சாத்வீக உணவு என்கிறோம். உடல் வலிமையையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடிய இந்த உணவில் உயிர்ச்சத்துகள் ஏராளமாக உள்ளன. சாத்வீக உணவுகளை உண்டால் உடல் உறுதிபெறும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!