தாயின் நேரடிக் கண்காணிப்பு கடமையல்ல... கட்டாயம்!

பால் தேவசகாயம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் இயக்குநர்ஹெல்த்

குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது கொடுமை; அதிலும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது கொடுமையின் உச்சம். இவை இப்போது பரவலாக நடந்துகொண்டிருப்பது நம்மைப் பதறவைக்கும், வேதனையில் ஆழ்த்தும் நிகழ்வுகள். `அந்தக் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் சொந்த உறவினர்களாலேயே இது போன்ற அவலத்தைச் சந்திக்கிறார்கள்’ - எட்டு மாநிலங்களில் வெவ்வேறு குறைபாடுகளுடைய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே `ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ (Human Rights Watch) என்ற தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவில் இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது.

 `பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா’ இருப்பதாக சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இனி பெண்களுக்கு மட்டுமல்ல, பால் மணம் மாறாத குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நாடாக இந்தியா விளங்கப்போகிறது என்ற தகவல் வருத்தமளிக்கிறது. சென்னையில் மாற்றுத்திறனாளிச் சிறுமி மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தலை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் இயக்குநர் (தமிழ்நாடு) பால் தேவசகாயத்திடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick