சோர்வைச் சோதியுங்கள்

ஹெல்த்

னித வாழ்க்கையில் சோர்வு தவிர்க்க முடியாதது.

சிலருக்கு அது எப்போதும் நிழல்போலத் தொடர்வதுண்டு.

காரணமின்றித் தொடரும் சோர்வை அலட்சியப்படுத்தக்கூடாது. அதன் பின்னணி அறிந்து தீர்வுகளைத் தேட வேண்டும்.

சோர்வு என்பது என்ன, அது என்ன செய்யும், சோர்வின் அளவை டெஸ்ட் செய்யும் முறை என எல்லாவற்றையும் பார்ப்போம்.

சோர்வு என்றால் என்ன?

சில உடல்நலக் கோளாறுகளுக்குச் சோர்வும் ஓர் அறிகுறியே! எந்த வேலையையும் செய்யத் தோன்றாத மந்தநிலை, உடலில் சக்தியே இல்லாதது போன்ற உணர்வு, எதைச் செய்தாலும் எளிதாகச் சோர்வடைவது போன்றவை சோர்வைக் குறிக்கும்.

சோர்வை அளக்கும் அளவை!

சோர்வின் தீவிரத்தை அளக்கும் அளவையின் பெயர் `ஃபேட்டிக் சிவியாரிட்டி ஸ்கேல்’ (FSS - Fatigue Severity Scale). இது, கேள்விகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் மொத்தம் ஒன்பது கேள்விகள் இருக்கின்றன. ஒவ்வொரு கேள்விக்கும் 1 முதல் 7 வரை மதிப்புகள் கொடுக்கப்படும். சோர்வைக் கணக்கிட நினைப்பவர், அவரின் சோர்வு குறித்த கேள்விகளுக்கு ஏற்ப 1 முதல் 7 வரை இருக்கும் மதிப்புகளில்  ஓர் எண்ணைக்  குறித்துக்கொள்ளலாம். ஒன்பது கேள்விகளுக்கான மொத்த மதிப்பெண் களையும் கூட்டினால், விடையாக 9 முதல் 63 வரை கிடைக்கும். அந்த மொத்த எண்ணை ஒன்பதால் வகுத்தால் கிடைக்கும் எண்தான், அவரின் சோர்வின் தீவிரத்தைக் குறிக்கும் மதிப்பு. மதிப்பு 1-ஆக இருந்தால் சோர்வு இல்லை; 7 ஆக இருந்தால் அதிகச் சோர்வு என ஒவ்வொரு மதிப்புக்கும் ஏற்ப சோர்வின் தீவிரத்தை அளந்துகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!