ஆரோக்கியம் இங்கே ஆரம்பம்!

ஹெல்த்

அந்த அழுக்குத் துணி

பெரும்பாலான சமையலறையில் இருக்கும் பிடிதுணி, பாத்திரங்களைப் பிடித்து அடுப்பிலிருந்து இறக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. உணவு சிந்தினால் அதைத் துடைக்க, சமையல் மேடையைச் சுத்தம் செய்ய என எல்லாவற்றுக்கும் அதைப் பயன்படுத்தும்போது, அந்த அழுக்குத் துணியில் நுண்கிருமிகள் சேர்ந்துவிடும். பின்னர் அதையே உணவுப் பாத்திரத்தை எடுப்பதற்கும் பயன்படுத்தும்போது, அந்தக் கிருமிகள் உணவில் பரவ வாய்ப்பாகிவிடும், நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே, உணவுப் பாத்திரங்களைக் கையாள, தனித் துணி பயன்படுத்துவதுடன், அதைத் தினமும் துவைத்துப் பயன்படுத்துவது அவசியம். கிச்சன் க்ளீனிங்குக்குப் பயன்படுத்தும் மற்ற துணிகளையும் தினமும் வெந்நீரில் அலசி, வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்