டாக்டர் நியூஸ்! | Doctor News - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/08/2018)

டாக்டர் நியூஸ்!

தகவல்

ந்தியர்கள் பெரும்பாலும் அரிசியோ கோதுமையோ உட்கொள்கிறவர்கள்; அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் இவைதாம் முக்கிய உணவுகள்.

‘இந்தப் பழக்கத்தை இந்தியர்கள் மாற்றிக்கொள்வது நல்லது’ என்கிறது ஒரு சர்வதேச ஆய்வு, அரிசி, கோதுமையையே முழுவதும் நம்பியிருக்காமல், சோளம், தினை போன்ற சிறுதானியங்களின் பக்கம் கவனத்தைத் திருப்பலாம், அவை ஆரோக்கியத்துக்கும் நல்லவை; சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை என்கிறது. அரிசி, கோதுமை ஆகியவற்றை விளைவிப்பதற்கு ஒப்பீட்டளவில் மிகுதியான தண்ணீர் தேவைப்படுகிறது. இவற்றைப் பயிரிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களும் இயற்கையில் பெரிய பாதிப்பை உண்டாக்கியுள்ளன. முக்கியமாக, இவற்றால் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாக இல்லை. இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து போன்றவற்றில் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இப்படிப் பல காரணங்களால், அரிசி, கோதுமையுடன் மற்ற சிறுதானியங்களையும் கணிசமான அளவில் நம் உணவில் சேர்ப்பது நல்லது என்கிறது இந்த ஆய்வு. இதன்மூலம் நம்மிடம் இருக்கும் நீர்வளத்தைப் பயன்படுத்தி எல்லா மக்களுக்கும் ஊட்டச்சத்துமிக்க உணவளிக்கலாம், சுற்றுச்சூழல் மாசும் குறையும்.