மருந்தாகும் உணவு - மணத்தக்காளி சாதம் | Health Benefits Of Black nightshade - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

மருந்தாகும் உணவு - மணத்தக்காளி சாதம்

உணவு - 4

வீரியம் அதிகமுள்ள மருந்து மாத்திரைகளால் ஏற்படும் உடல் உபாதைகள், பின்விளைவுகள், ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவை ஏற்படுத்தும் பாதிப்புகளை முறிக்கும் சக்தி, மணத்தக்காளிக்கு உண்டு. தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான சிறந்த தீர்வு மணத்தக்காளிச் சாறு. மனஅழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கும், அதிக வெப்பமான சூழலில் வேலை செய்பவர்களுக்கும் வயிற்றுப்புண் வர வாய்ப்பு அதிகம். இவர்கள், வாரம் ஒரு முறை ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளி சாப்பிடுவது வயிற்றுப்புண்ணைத் தடுக்கும். வாய்ப்புண்ணையும் போக்கும். குரல்வளத்தை மேம்படுத்தும். 

[X] Close

[X] Close