இப்படியும் தவிர்க்கலாம் ஜலதோஷம்!

ஹெல்த்

சாதாரண தும்மலில்தான் ஆரம்பிக்கும் ஜலதோஷம். ஆனால், சளித்தொல்லை நம் வழக்கமான செயல்பாடுகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிடும். எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது; சாப்பிடுவது, தூங்குவதுகூட நேரத்துக்கு நடக்காது. `தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டுகிறார்களே’ என ஜலதோஷத்துக்கான மாத்திரையை வாங்கி விழுங்குவோம். தைலத்தை வாங்கித் தேய்ப்போம். ஜலதோஷமோ, `நீ என்ன வேணாலும் பண்ணிக்கோ...’ என்று நம்மிடம் ஒட்டிக்கொண்டு `பெப்பே...’ காட்டும். எத்தனையோ வலிகளுக்கும் நோய்களுக்கும் ஒரு மாத்திரையில்  நிவாரணம் கிடைப்பதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஐலதோஷத்துக்கு மட்டும் அப்படி ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஆக, சளி பிடித்தால், அதை அனுபவித்தே ஆக வேண்டும். வேறு வழியில்லை. ஆனால்,  ஜலதோஷத்தை  வரும்முன் தவிர்க்கலாம். சரி, சளி ஏன் உருவாகிறது, தவிர்ப்பது எப்படி?  உடலில் நோய்  எதிர்ப்புசக்தி குறையும்போது தீங்கு  விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகமாகும்; அதனால் சளித்தொல்லை உண்டாகும்.  எனவே, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்து சளித் தொந்தரவில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று பார்ப்போம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick