டிஜிட்டல் திரை கண்ணை மயக்குதா?

தகவல்

ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் டிவி... இவற்றில் ஒன்றோ, பலவோ நம் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை நாம் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோம்? நம் குழந்தைகள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள்? இரண்டுமணி நேரத்துக்கும் அதிகமாக இந்த ஸ்க்ரீன் டைம் இருக்கக் கூடாது என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள் ஆக்ஸ்ஃபோர்டு விஞ்ஞானிகள். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் நாம் டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பது அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. 2000-ம் ஆண்டில் நாம் டிவி பார்த்ததைவிடவும், இப்போது சராசரியாக முன்பைவிட பத்து நிமிடங்கள் குறைவாகவே பார்க்கிறோம். ஆனால், மொபைல், டேப் போன்ற டிஜிட்டல் ஸ்கிரீன் கேட்ஜெட்ஸைப் பயன்படுத்தும் நேரம் மேலும் 40 நிமிடங்கள் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, இந்தக் கணக்கீடு பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிக அளவில் பொருந்துகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick