ஊட்டச்சத்து திருடர்கள் ஜாக்கிரதை! | Malnutrition: Symptoms, causes, diagnosis, and treatment - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2018)

ஊட்டச்சத்து திருடர்கள் ஜாக்கிரதை!

ஹெல்த்

ன்றைக்கு உடல் பருமனைப்போல ஊட்டச்சத்துக்குறைபாடு பிரச்னைக்குத் தீர்வு காண்பதும் சவாலாகவே இருக்கிறது. `இதற்குச் சத்தான உணவைச் சாப்பிடாதது மட்டும் காரணமல்ல, நாம் அன்றாடம் அருந்தும் சில வகை பானங்கள், கடைப்பிடிக்கும் பழக்கங்கள்கூட உடலில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவைக் குறைக்கின்றன’ என்கிறார்கள் மருத்துவர்கள். அவ்வளவு ஏன், ஆரோக்கியமான உணவாகவே இருந்தாலும், ஒன்றுக் கொன்று ஏற்றுக்கொள்ளாத இரண்டு உணவுகளைச் சாப்பிடுவதும், சில வகை உணவுகளுடன் மருந்துகளைச் சேர்த்து உட்கொள்வதும்கூட உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துகளை முழுமையாகக் கிடைக்காமல் செய்துவிடும். உடலுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளை முழுமையாகக் கிடைக்கவிடாமல் தடுப்பவற்றை ‘ஊட்டச்சத்து திருடர்கள்’ என்கிறோம். அவை எப்படி பாதிப்பை ஏற்படுத்துகின்றன, எப்படித் தடுக்கலாம் என்று பார்ப்போம்...  

[X] Close

[X] Close