வலிக்கும் விரல்கள்... வலிமை சேர்க்கும் பயிற்சிகள்

கொ.குமரேசன் உடற்பயிற்சி நிபுணர்ஃபிட்னெஸ்

``கை நடுக்கம், விரல்களால் எதையும் சரியாகப் பிடிக்க முடியாமலிருத்தல், மணிக்கட்டுப் பகுதியில் வலி... இந்தப் பிரச்னைகள் எல்லாம் முதியவர்களுக்கு வரலாம்; மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என இருப்பவர்களுக்கு ஏற்படலாம். இப்போது மாணவ, மாணவியர்களும் அதிக அளவில் இவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். பேனாவைப் பிடித்து எழுதும்போது, விரல்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதால் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால், தசைநார்களில் பாதிப்பு, நரம்புப் பிரச்னைகள், விரல்களில் வலு குறைந்து போதல், சோர்வு எனப் பல பிரச்னைகள் ஏற்படும். இதிலிருந்து மீள சில பயிற்சிகளை விரல்களுக்குக் கொடுக்கவேண்டியது அவசியம்’’ என்கிற உடற்பயிற்சி நிபுணர் கொ.குமரேசன், அந்தப் பயிற்சிகள் பற்றியும் அவற்றை எப்படிச் செய்வது என்பதையும் விளக்குகிறார்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick