குத்தி வீழ்த்திய காட்டெருமை... குடலை இழந்த இளைஞர்... வாழ்வை நேசிக்கும் வனமகன்!

ஹெல்த்

சிறுவயதில் இருந்தே காடுகள் மீதும் பறவைகள் மீதும் பேரார்வம் கொண்டவர் சந்திரசேகர். நீலகிரி வனப் பாதுகாப்புக் கழகத்தில் உறுப்பினராக இருக்கிறார். 12:01:2009 மாலை ஆறு மணி... தன்னுடைய நான்கு நண்பர்களுடன் எப்போதும் செல்வதுபோல வனத்தைப் பார்வையிட, மிளிதேன் அருகிலிருக்கிற பெரிய சோலை என்கிற காட்டுப் பகுதிக்குள் செல்கிறார். நண்பர்களுக்குக் காடுகள் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் சொல்லிக்கொண்டிருக்கிறார். அது காட்டு விலங்குகள் அவ்வளவாக இல்லாத நேரம். முயல். நரி, முள்ளம்பன்றி, காட்டுப் பன்றி, என மூர்க்கத்தனம் இல்லாத விலங்குகள் மட்டுமே தென்படுகிற காலம். வனப்பகுதியின் எல்லையில் இருக்கிற ஆபத்தை உணராமல் நண்பர்களோடு உள்ளே செல்ல முயல்கிறார். ஐநூறு மீட்டர்கள் உள் நுழைந்ததும் எதிரில் காட்டெருமை இருப்பதைப் பார்க்கிறார். உடனே நண்பர்களை உஷார்படுத்துகிறார். எல்லோரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடுகிறார்கள். காட்டெருமை திடீரென சேகரை நோக்கி ஓடி வருகிறது. சேகர் பக்கத்தில் இருக்கிற சிறிய மரத்தில் ஏறி விடுகிறார். அவர் இருக்கிற மரத்தின் அடியில் வந்து நிற்கிற காட்டெருமை தன்னுடைய கொம்புகளால் தரையில் குத்திக் கோபத்தை வெளிக்காட்டுகிறது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick