ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

ஹெல்த்

10,000 மருந்து வகைகள்... 1200 காம்பினேஷன்கள்...

ந்திய மருத்துவச் சந்தை வித்தியாசமானது. ஒரே காம்பினேஷனில் பல பிராண்டுகள் மருந்துகளை விற்பதுண்டு. ஆனால், ஒவ்வொன்றுக்கும் விலையில் அவ்வளவு வித்தியாசம் இருக்கும். சில சமயம், விலை பிரச்னையில்லை என்றாலும் நமக்குத் தேவையான காம்பினேஷன் கிடைக்கவே கிடைக்காது. மருந்துக் கடைக்காரர் தரும் வேறு பெயரிலான மருந்தை வாங்கவும் தயக்கம். இந்த ஆப் இதற்கான தீர்வை நோக்கி நகர்கிறது. 10,000 மருந்து வகைகளையும் 1200-க்கும் அதிகமான காம்பினேஷன்களையும் இந்த ஆப் பட்டியிலிட்டிருக்கிறது. மாற்று மருந்து எவை, அவற்றின் விலை, எந்த பிராண்டு என்பனவற்றை அழகாகப் பிரித்துக்காட்டுகிறது.  மருத்துவக் குழுவினரின் உதவியுடன், தினமும் இந்தப் பட்டியலை அப்டேட்டும் செய்துவருகிறார்கள்.

ப்ளே ஸ்டோரில் ஒரு லட்சம் பயனர்களுடன் ஐந்துக்கு 4.5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கிறது இந்த ஆப்.

டவுன்லோடு செய்ய: http://bit.ly/2Bi69hU

மருந்துகளுக்கான ‘ஃப்ளிப்கார்ட்’

டா
க்டர் எழுதித்தரும் மருந்துகளை ஒரு முறை இந்த ஆப்-ல் என்டர் செய்துவிட்டால் போதும்; மருந்துகளை வீடு தேடி வந்து டெலிவரி செய்கிறார்கள். மருந்துகள் தீரும் நேரத்துக்கு முன்பாகவே நமக்கு நினைவுபடுத்துகிறது இந்த ஆப். மருந்தின் விலையிலிருந்து அதன் காம்பினேஷன் வரை தெளிவாக ஆப்பிலேயே பார்த்துக்கொள்ளலாம். ஆர்டர் செய்த மருந்து எங்கிருக்கிறது என்பதை லைவாக ட்ராக் செய்யலாம். மருந்துகளுக்கு 10 முதல் 20 சதவிகிதம் தள்ளுபடியும் உண்டு. அவை தவிர சில வங்கிக்கணக்குகளுக்குக் கூடுதலாகத் தள்ளுபடியும் உண்டு. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் இந்த ஆப், ப்ளே ஸ்டோரில் 4.4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கிறது.

டவுன்லோடு செய்ய:
http://bit.ly/2BfSIiP

- கார்க்கிபவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick