பார்த்த ஞாபகம் இல்லையே..! | Face Blindness (Prosopagnosia): Test, Symptoms, and Treatment Information - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/01/2018)

பார்த்த ஞாபகம் இல்லையே..!

சுபா சார்லஸ் மனநல மருத்துவர்

விசித்திரமான பிரச்னையோடு வந்தார்கள் அப்பாவும் மகனும்.

``அப்பாவுக்குத் திடீர்னு என்னை யார்னே தெரியலை மேடம்’’ என்றார் மகன்.  அப்பாவுக்கு 55 வயதிருக்கும். இரண்டு பெண் குழந்தைகள். பல வருடங்களுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு 18 வயது ஆகும்போது அந்த அப்பா தன் சொத்துகளை எல்லாம் இழந்திருந்தார். குடியிருந்த வீட்டைக்கூட காலி செய்துவிட்டு, வாடகை வீட்டுக்கு வந்துவிட்டார்கள். என்னைப் பார்க்க வந்தபோது மகன்தான் அப்பாவின் கைப்பிடித்து அழைத்து வந்தார். மகனிடம் `‘நீ யாரு.... உன்னைத் தெரியலையே’’ என்றே சொல்லிக்கொண்டிருந்தார். கதறும் மகனின் கண்ணீர், மருத்துவராகிய என்னையே உலுக்கியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close