STAR FITNESS: வாழ்க்கையில் வெற்றிபெற உடலையும் உள்ளத்தையும் வலுவாக்குங்கள்!

கடல் நீச்சலில் சாதனை படைத்த கூடுதல் டி.ஜி.பி சைலேந்திரபாபு அட்வைஸ்ஃபிட்னெஸ்

லங்கைத் தலைமன்னாருக்கும் தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கும் இடையே உள்ள 28.7 கிலோமீட்டர் பாக் ஜலசந்திப் பகுதியை, இதுவரை பல கடல் நீச்சல் வீரர்கள் நீந்திச் சாதனை படைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழக ரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி சைலேந்திர பாபு, பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்துள்ள சாதனையை, கடல் நீச்சல் வீரர்களே பிரமிப்பாகப் பார்க்கிறார்கள். அதுவும் 56 வயதில் அவர் புரிந்துள்ள இந்தச் சாதனை, சாகச விளையாட்டு வீரர்களுக்குப் புது உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தன்னுடைய காவல்துறைப் பணிக்கு இடையே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தல், தன்னம்பிக்கைச் சொற்பொழிவாற்றுதல், கட்டுரை எழுதுதல் என எப்போதுமே பிஸியாகவே இருக்கும் அவரைச் சந்தித்தோம். கடல் நீச்சல், உடல் ஃபிட்னெஸ் குறித்து அவரிடம் பேசினோம்.


கடல் நீச்சல் அனுபவம் எப்படியிருந்தது?

``ஆறு, ஏரி, நீச்சல்குளங்களில் நீந்துவதற்கும் கடலில் நீந்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. கடலில் நீந்தும்போது, கடல் அலையின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து நீந்த வேண்டும். நீந்தும்போது மேலே பார்த்தால் சூரிய வெளிச்சம் கண்களைப் பறிக்கும் வகையில் ஒளிவீசும். கடல் நீரோட்டம், கடல் காற்று ஆகியவற்றுக்கு ஏற்ப நீந்த வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்