உங்கள் மகிழ்ச்சிக்கு எத்தனை மதிப்பெண்கள்? | Give a marks of your happiness? - Doctor Vikatan | டாக்டர் விகடன்

உங்கள் மகிழ்ச்சிக்கு எத்தனை மதிப்பெண்கள்?

ஹெல்த்

யிறு குலுங்குகிறது. மிகவும் சிரமப்பட்டுக் கைகளை வாயின் மேல் வைத்து அடக்கப் பார்க்கிறீர்கள்.  வெடித்துச் சிரிக்கிறீர்கள். எதிரில் இருப்பவரும் அடக்க முடியாமல் சிரித்து அதிரச் செய்கிறார். கண்களில் நீர் நிற்கிறது. ஆனால், அந்தச் சிரிப்பு நிற்கவில்லை. ஒருவழியாக சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்புகிறீர்கள். இப்படி நீங்கள் கடைசியாகச் சிரித்தது எப்போது?

உங்கள் வீட்டில் அல்லது உங்கள் தெருவில் இருக்கும் சிறு குழந்தைகளின் செயல்பாடுகளை எப்போதாவது உற்று நோக்கியிருக்கிறீர்களா? இன்று பாருங்கள். குறைந்தது பத்து நிமிடத்திற்கு ஒரு முறையேனும் சிரிப்பார்கள். அவர்களால் மட்டும்தான் ஒவ்வொரு விஷயத்திலும் சிரிப்பதற்கான காரணங்களைக் கண்டறிய முடியும்.  குழந்தைகளைப்போல நகைச்சுவையை எல்லா இடங்களிலும் தேடினால்,  நாமும் ஆரோக்கியமாக வாழலாம் என்று சத்தியம் செய்கின்றன பல்வேறு  ஆய்வுகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick