நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? - கண்டுபிடிப்பது எப்படி?

பட்டா ராதாகிருஷ்ணன், குடல், இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர்ஹெல்த்

நெஞ்செரிச்சல், மாரடைப்பு... இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி. இரண்டுக்குமான அறிகுறிகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். மாரடைப்பு ஏற்படும்போது, சிலருக்கு ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம். `நெஞ்சுவலி வந்தால், அது மாரடைப்பாக இருக்கும் என அச்சம் கொள்வது, `நெஞ்செரிச்சல்தானே... அது தானாகச் சரியாகிவிடும்’ என்று அலட்சியமாக இருப்பது என இரண்டுமே தவறு’ என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்’ என்கிறார்கள். நெஞ்செரிச்சல் ஏற்படுவது ஏன், அதை மாரடைப்பிலிருந்து எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது, அதற்கான தீர்வுகள் என்னென்ன? குடல், இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர் பட்டா ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். 

``நாம் சாப்பிடும் உணவை, இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது 25 செ.மீ நீளமுள்ள உணவுக்குழாய். ஆரம்பத்திலிருந்து கடைசிவரை சுருக்குத் தசையால் ஆன கதவு போன்ற இரண்டு தடுப்பு வால்வுகளைக் கொண்டது உணவுக்குழாய். இதன் ஆரம்பத்திலிருக்கும் வால்வு, நாம் உணவை விழுங்கும்போது,  மூச்சுக்குழாய்க்குள் உணவு செல்லாமல் தடுக்கும். முடிவில் காணப்படும் வால்வு, இரைப்பையில் சுரக்கும் அமிலத்தை உணவுக்குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கும். இந்த வால்வு, உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஓர் எல்லைக்கோடுபோலச் செயல்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்