இனி ஆண்களுக்கும் பிரசவ வலி! - மாற்றங்களுக்குத் தயாராவோம்

குடும்பம்

``வாழ்த்துகள், நீங்க அம்மாவாகப் போறீங்க...” என்று உறுதிப்படுத்தும் தருணம் உண்மையிலேயே உன்னதமானது. பெண் கருவுற்றதை உறுதி செய்ததும் ஏராளமான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்வார்கள் மருத்துவர்கள். ஆனால் எல்லா ஆலோசனைகளும் பெண்ணுக்கானதாகவே இருக்கும். அப்படியானாால், பெண் கருவுற்ற காலத்தில் ஆண்களுக்குப் பொறுப்புகளோ, கடமைகளோ இல்லையா?

“நிச்சயமாக ஆணுக்கும் பொறுப்புகள், கடமைகள் இருக்கின்றன’’ என்கிறார் மனநல ஆலோசகர் ரேகா சுதர்சன்.

“ஒரு பெண் தாயாகும்போது எப்படி உணர்கிறாரோ, அப்படித்தான் ஆணும் உணர்கிறார். பெண் கருவுற்ற காலத்தில், அந்தப் பெண்ணைவிட அதிகப் பொறுப்பு ஆணுக்குத்தான் இருக்கிறது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மனைவியின் தேவைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். அந்தக்காலத்தில் இப்படியான அரவணைப்பு பெண்களுக்குக் கிடைக்கவில்லை. இப்போது நிலை கொஞ்சம் மாறியிருக்கிறது. பல ஆண்கள், கர்ப்ப காலம் தொடர்பான விஷயங்களை ஏற்கெனவே இணையத்தில் தேடித் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மனைவியை அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார்கள்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக பயப்படுவார்கள் என்பதால், அவர்களை அக்கறையுடன் கவனித்து தைரியமூட்ட வேண்டும். அக்கறையான ஆண்களுக்கும்கூட குழந்தை பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. உதாரணமாக, குழந்தை ஏன் அழுகிறது, எப்போது பசி எடுக்கும் என்றெல்லாம் தெரியாது. இரண்டாவது குழந்தை என்றால், இரண்டு குழந்தைகளையும் சேர்த்து எப்படிச் சமாளிப்பது என்பதும் தெரியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick