அடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்!

ஸ்ரீகலா பிரசாத், யூரோ கைனகாலஜிஸ்ட்ஹெல்த்

சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாவது மற்றும் புற்றுநோய் கட்டிகள் உருவாவது குறித்த விழிப்பு உணர்வு பெண்களுக்கு ஓரளவு ஏற்பட்டிருக்கிறது. இவற்றைப்போலவே ‘டெர்மாய்டு’ (Dermoid Cyst) எனப்படும் கட்டியும் பெண்களின் சினைப்பைகளைத் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? இதோ யூரோ கைனகாலஜிஸ்ட் ஸ்ரீகலா பிரசாத், ‘டெர்மாய்டு’ குறித்துத் தரும் முழுமையான விளக்கங்கள் இங்கே...

‘‘வயதுக்கு வந்தது முதல் மெனோபாஸ் நிலைக்கு முந்தைய காலகட்டம் வரை இருக்கிற பெண்களின் சினைப்பையில் உருவாகும் ஒருவகைக் கட்டிதான் டெர்மாய்டு.  முடி, பல், தைராய்டு சுரப்பி போன்ற அமைப்புகள் (Structures) இந்தக் கட்டிக்குள் காணப்படும். பெரும்பாலும் ஒரு சினைப்பையில்தான் இந்தக் கட்டி வரும். அரிதாக இரண்டு சினைப்பைகளிலும் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ‘டெர்மாய்டு’ கட்டி, கேன்சர் கட்டியாக  மாறுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு.  ஆனால்,  இந்தக் கட்டி முறுக்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. அப்படி முறுக்கிக்கொண்டால், அந்த இடத்தில் ரத்த ஓட்டம் நின்றுவிடும். அதனால் அந்தக் கட்டி அழுகிப்போய் உயிருக்கே ஆபத்தாகலாம். அதனால் டெர்மாய்டு கட்டியை அலட்சியப்படுத்தக் கூடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick