நிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்

னித குலம் தோன்றிய காலம் முதலே பயன்பாட்டில் உள்ளது இயற்கை மருத்துவத்தில் முக்கியமான  நீர் சிகிச்சை (Hydrotherapy). நோயின் தன்மைக்கேற்ப,  நீரைக் குளிரூட்டியோ, சூடுபடுத்தியோ இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சிகிச்சை இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்க,  துணியை நீரில் நனைத்துக் கட்டி சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்தச் சிகிச்சை, உடலில் ஏற்படும் வலிகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். நோய்களுக்கு ஏற்ப, வெவ்வேறு  வெப்பநிலைகளில் இந்தச் சிகிச்சை அளிக்கப்படும். வெதுவெதுப்பான நீரைக்கொண்டு சிகிச்சை அளிக்கும்போது உள்ளுறுப்புகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி அமைதியான நிலையை ஏற்படுத்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick