நாப்கின் அலர்ட்!

ஆனந்தப்பிரியா, மகப்பேறு மருத்துவர்ஹெல்த்

``ஆடைகள் மற்றும் அழகுசாதனப் பொருள்களை ஆர்வத்துடன் விசாரித்து வாங்கும் பெண்கள்,  நாப்கின் வாங்கும்போது போதிய அக்கறை செலுத்துவதில்லை. அழகுப் பராமரிப்பு பற்றிப் பேசும் அளவுக்கு, மாதவிடாய் பற்றிய விழிப்பு உணர்வுத் தகவல்களைக் கலந்துரையாடுவதில்லை. படித்த பெண்கள்கூட நாப்கின் பற்றிப் பேசவும் அது தொடர்பான சந்தேகங்களைக்  கேட்கவும் தயங்குகின்றனர். விளம்பரம், கவர்ச்சிகரமான பேக்கிங் என்பதன் அடிப்படையிலேயே நாப்கின்களைத் தேர்வுசெய்கின்றனர். தவறான நாப்கின் தேர்வு மற்றும் முறையற்ற பயன்பாடு, அவர்களுக்கு உடல்ரீதியாகப் பல தொந்தரவுகளைக் கொடுக்கும் அபாயம் உள்ளது’’ என்று எச்சரிக்கும், மகப்பேறு மருத்துவர் ஆனந்தப்பிரியா, நாப்கின் வாங்கும்போதும், பயன்படுத்தும்போதும் கவனிக்க வேண்டிய அடிப்படை விஷயங்களை விளக்குகிறார்.

‘‘நாப்கின்கள் நான்கு லேயர்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. முதல் லேயர், சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது. இரண்டாவது லேயர், மறுசுழற்சி செய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரால் ஆனது. மூன்றாவது லேயர், ஈரத்தை உறிஞ்சக்கூடிய பெட்ரோலியம் ஜெல்லால் ஆனது. நான்காவது லேயர், ஈரத்தை ஆடையில் கசியவிடாத, நாப்கினை உள்ளாடையுடன் ஒட்டவைக்கக்கூடிய பாலித்தீனால் ஆனது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick