டாக்டர் நியூஸ்!

தகவல்

சுத்தமாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கையைக் கழுவுகிறவரா நீங்கள்? அதன்மூலம் உங்களுடைய ஆரோக்கியம் குறையக்கூடும் என்கிறது புகழ்பெற்ற ஃபார்ச்சூன் இதழ்.

கையைக் கழுவினால் ஆரோக்கியம் கெட்டுப்போகுமா? அது எப்படி?

மனித உடலில் உள்ள செல்களில் பாதிதான் அவனுக்குச் சொந்தமாம், மீதமுள்ள அனைத்தும் பாக்டீரியா, பூஞ்சைகள், ப்ரோட்டோஜோன்கள், வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகள். ஆனால், இதை எண்ணி மனிதன் பயந்து நடுங்க வேண்டியதில்லை, இவற்றில் பல நுண்ணுயிரிகள் ஆபத்தில்லாதவை; சில, மனிதர்களுக்கு நன்மை செய்கிறவை. இதைப் புரிந்துகொள்ளாமல் நாம் எல்லா நுண்ணுயிரிகளையும் அழிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டோம், மனிதனுக்குள் இருக்கும் நுண்ணுயிர்ப் பன்முகத்தன்மை குறைந்துவிட்டது என்கிறார்கள், சமீபகாலமாக நீரிழிவு, மல்ட்டிபிள் ஸ்க்லெரோசிஸ் போன்ற நோய்கள் அதிகம் வருவதற்கு இது காரணமாக இருக்கலாமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது, மனித உடலில் இருக்கும் நல்ல நுண்ணுயிரிகளைப் பயன்படுத்திக்கொண்டு அவனுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த இயலுமா என்னும் ஆராய்ச்சிகள் தீவிரமாகியிருக்கின்றன.

‘கறை நல்லது’ என்று விளம்பரத்தில் சொல்வதுபோல், (சில) கிருமிகளும் நல்லவைதான்போல!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick