மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்!

லதா, புற்றுநோய் சிறப்பு மருத்துவர்ஹெல்த்

``உணவுப்பழக்க வழக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு, சீரற்ற ஹார்மோன் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை யாரை வேண்டுமானாலும் புற்றுநோய் பாதிக்கலாம். முப்பது வயதைக் கடந்த பெண்கள் மார்பகம், கர்ப்பப்பைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஆண்களுக்கும் மார்பகப்புற்று வர வாய்ப்பிருப்பதால், விழிப்பு உணர்வு அவசியம்’’ என்கிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் கே.வி.எஸ்.லதா. புற்றுநோய் என்றால் என்ன? அது ஏற்பட என்ன காரணம்? குணப்படுத்தக்கூடிய, குணப்படுத்த முடியாத புற்றுநோய்கள் எவை? விரிவாக விளக்குகிறார் மருத்துவர் லதா.

``மனித உடல் செல்களால் ஆனது. செல்கள் அணுக்களால் ஆனவை. உடலின் ஒவ்வோர் இயக்கத்துக்கும் செல்களிலிருக்கும் மரபணுக்களே உதவுகின்றன. செல்கள் உருவாகி, உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் துணைபுரிந்து, அவை சில நாள்களில் அழிந்துபோய், மீண்டும் புதிய செல்கள் உருவாக வேண்டும். இந்தச் செயல்பாட்டைத்தான் `வளர்சிதை மாற்றம்’ என்பார்கள். ஆனால், இதற்கென உள்ள காலஅளவைத் தாண்டி, செல்கள் சீரற்ற நிலையில் வளர்ந்தால், நாளடைவில் அவை கட்டிகளாக மாறிவிடும். அதற்குப் `புற்றுநோய்’ என்று பெயர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick