தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 10வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

‘இந்தக் காரணத்தால்தான் இந்த நோய் பரவுகிறது’ என்று கண்டறியாத காலங்களில் வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. யூகத்தின் அடிப்படையில் நோயைக் கணித்து, ரசாயனங்களை அப்படியே சாப்பிடக் கொடுப்பார்கள். 1885-ம் ஆண்டுக்கு முன்னர், மெர்க்குரி, சில்வர், ஆர்செனிக் போன்ற ரசாயனங்களை மருந்தாகப் பயன்படுத்தியதாகத் தரவுகள் இருக்கின்றன. குறிப்பாக, ‘சிபிலிஸ்’ (Syphilis) நோய்க்கு மெர்க்குரியைத்தான் மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நோயால் இறந்தவர்களைவிட, நோய்க்குக் கொடுத்த ‘மருந்தால்’ இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick