நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 14 | Home Remedies for Menstrual Problems - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2018)

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 14

போப்பு, மருத்துவ எழுத்தாளர்

ளி, நெகிழ்வுத் தன்மை மிகுந்த ஓர் உணவு. செரிமானமாக உடல் எவ்வித ஆற்றலையும் அதிகமாகச் செலவிட வேண்டியதில்லை. வயிற்றில் அரைபடும் வேலை குறைவு என்பதால் உடலில் அதிக வெப்பம் உருவாவதும் தவிர்க்கப்படும். அதனால் உடலில் வெப்பக்கழிவு வாய்வு வடிவில் தேங்குவதில்லை. பெண்களுக்கான தனித்துவமான வழிபாடுகளின்போது களியும் கொழுக்கட்டையும் படைத்து உண்பது நமது மரபில் இருந்து வந்துள்ளது. இன்றைக்கு அத்தகைய விரதங்களும் வழிபாடுகளும் பெரும்பாலும் வழக்கொழிந்து விட்டன. பெண்களில் பூப்பெய்தாத சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ரகசிய பூஜை வழிபாடுகள் உலகின் அனைத்துச் சமூகங்களிலும் உண்டு. அவை பெண்கள் உடல் நலனுக்கு முக்கியத்துவம் தந்து நடத்தப்படக்கூடியவையாகும். சந்ததியை உற்பத்தி செய்வதில் பெண்ணுக்கு உடல் சார்ந்த பெரும்பங்கு இருப்பதால் அதற்குரிய முக்கியத்துவம் காலங்காலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close