குழந்தைக்கும் வரலாம் குடலிறக்கம்

ஹெல்த்

குடலிறக்கம் எனப்படும் ‘அம்பிலிக்கல் ஹெர்னியா’ (Umbilical Hernia), திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும்  நோய்களில் ஒன்று. உங்கள் வீட்டு உறவுப்பெண்களில் யாருக்காவது இந்தப் பிரச்னை இருக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு அறுவை சிகிச்சை தேவையா? தேவை என்றால் லேப்ராஸ்கோபி (Laparoscopy) அல்லது ஓபன் சர்ஜரி (Open Surgery) ஆகிய இரண்டில் எது சிறந்தது? என்பனபோன்ற சந்தேகங்கள், குழப்பங்கள் இருக்கின்றன. இதுகுறித்து ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியரும், பொது அறுவைசிகிச்சை நிபுணருமான ஆனந்தியிடம் கேட்டோம்.

``ஹெர்னியா அல்லது குடலிறக்க நோய் என்பது  உடலில் உள்ள பலவீனமான துளைகளின் வழியாக உடல் உறுப்புகள் வெளியே வருவது; குறிப்பாக, குடல் வெளியே வருவதையே அப்படி அழைப்பார்கள்.  இதில்,  அம்பிலிக்கல் ஹெர்னியா என்பது தொப்புள் மற்றும் அதன் அருகே ஏற்படும் குடலிறக்க நோயாகும். இது ஆண், பெண் இருவரையும் பாதிக்கும் என்றாலும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. இது பிறவியிலோ அல்லது இடைப்பட்ட காலத்திலோகூட வரலாம். பிறந்த குழந்தைகளில் சிலருக்குத் தொப்புள்  வீங்கியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதுவும் அம்பிலிக்கல் ஹெர்னியாதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்