டாக்டர் 360: ஆயுசு 100 - செஞ்சுரி போட சில வழிகள் | Tips for living 100 years - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2018)

டாக்டர் 360: ஆயுசு 100 - செஞ்சுரி போட சில வழிகள்

ஹெல்த்

`முப்பது வயதிலிருந்தே சில பழக்கங்களைக் கடைப்பிடித்தால் அதிக நாள்கள் உயிர் வாழலாம்’, `மனிதனின் வாழ்நாளைக் குறைப்பதில் சுவாசம் தொடர்பான கோளாறுகள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன’, `மொத்த ஆயுள் காலத்தில் 20 சதவிகிதம் மரபணுக்களைப் பொறுத்தே அமைகிறது’ - 100 வயது வரை வாழ்வது குறித்து மருத்துவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களிடம் கிடைத்த பதில்கள் இவை.

முதுமை... ஒவ்வோர் உயிரினமும் தம் வாழ்நாளில் எதிர்நோக்கும் ஒன்று. உலகின் அனைத்து உயிர்களின் உடல் அமைப்புக்கும் அடிப்படையானவை அணுக்கள். நமது உடலின் ஒவ்வொரு பாகமும் எங்கும் நிறைந்திருக்கும் அணுக்களால் ஆனதே. திசுக்களை அணுத் திரள்களே வடிவமைத்துள்ளன. ஆனால், ஆயுள் முழுக்க ஒரே அணுக்கள் உடலில் இருப்பதில்லை. அவை புதிது புதிதாக உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். முதிர்ச்சி அடையத் தொடங்கும்போது அணு உற்பத்தியின் வேகம் குறையத் தொடங்கும். அணுக்களில் இருக்கும் நிறமிகள் பாதிப்படைவதால், உடல் வெளுக்கத் தொடங்கும். அணுக்களும் திசுக்களும் மாற்றமடைவதால், உடலின் பாகங்களும் மாற்றமடையும், வலுவிழக்கும்.

[X] Close

[X] Close