தொப்பை மறைப்பதா குறைப்பதா? | Reduce Your Belly Fat - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/05/2018)

தொப்பை மறைப்பதா குறைப்பதா?

ஹெல்த்

`ஜிம்முக்குப் போகாமல் ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்கலாம்’, இந்த ஜூஸைக் குடிங்க, கொஞ்சம் கொஞ்சமா தொப்பை கரைஞ்சுடும்...’, `இந்த பெல்ட்டை தினமும் அரை மணிநேரம் வயித்துல கட்டிக்கிட்டா மூணே வாரத்துல அழகான இடுப்புக்கு உத்தரவாதம்’ - இதுபோன்ற விதவிதமான விளம்பரங்களைச் செய்து வருகின்றன பல டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள். ஒரு காலத்தில் முக அழகு, சருமப் பராமரிப்பு எனச் சுற்றிச் சுழன்று படையெடுத்த விளம்பர நிறுவனங்கள், இன்றைக்கு வயிற்றை அழகாகக் காண்பிக்க இப்படியெல்லாம் மெனக்கெடுகின்றன. அழகான உடலமைப்பு லிஸ்ட்டில் தொப்பை இல்லாத வயிறும் சேர்ந்துவிட்டதுதான் இதற்குக் காரணம்.

`தொப்பை ஏற்படப் பல காரணங்கள் இருந்தாலும், அதிகமாக உணவு உட்கொள்வதும், உடல் உழைப்பு இல்லாததும்தான் இதற்கு அடிப்படைக் காரணங்கள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் அவற்றைக் கடைப்பிடிக்காமல் கண்டவற்றையும் வயிற்றில் கொட்டிக்கொண்டு, தொப்பை விழுந்த பிறகு ஜிம்மே கதியெனக் கிடக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். சிலரோ தொப்பையைப் பற்றிக் கவலைப்படாமல், சற்று பெரிய சட்டையைப் போட்டு அட்ஜஸ்ட் செய்துகொள்வது அல்லது பெல்ட்டை போட்டுக்கொள்வது எனச் சமாளிக்கிறார்கள். ஆனால், தொப்பை (Central Obesity) வெறும் அழகுப் பிரச்னை மட்டுமல்ல, அதை மறைத்துக்கொண்டு தப்பிப்பதற்கு. `இது நீங்கள் வயிற்றில் சேமித்துவைக்கும் தேவையற்ற கொழுப்பு. தொப்பை, இதயநோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களுக்குக் காரணமாகி, உயிருக்கே உலை வைக்கலாம்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.  தவறான உணவுப் பழக்கங்களும், உடல் உழைப்பு குறைந்துபோவதும் சேர்ந்து நவீன இந்தியர்களை, `தொந்தியர்’களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. மரபணுரீதியாக பிற நாட்டினரைவிட, இந்தியர்களுக்கே தொப்பை ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close