கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், தினசரி பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்துச் சாப்பிட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இதனால் ரத்த அழுத்தம் சீராகும் என்றும் சொல்கிறார்கள். பாதாம் சாப்பிடுவது நல்லதா?

- ர.சேதுராமன், திருவள்ளூர்

சீனியர் சிட்டிசன்ஸ் பலரும் இதயப்பிரச்னை, மூட்டுப்பிரச்னை, மூச்சுப்பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. அப்படியான உடல் சார்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்னைகளும் சிக்கல்களும் இருப்பவர்கள் தினசரி பாதாம் எடுத்துக்கொள்வது தவறு. உடல் சார்ந்த பிரச்னைகள் இல்லாதவர்கள், தினசரி இரவு மூன்று முதல் ஐந்து பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் சாப்பாட்டுக்கு முன்னர் சாப்பிட்டு வரலாம். ரத்த அழுத்தத்துக்கும் பாதாம் சாப்பிடுவதற்கும் தொடர்பில்லை.

- அனிதா பாலமுரளி, ஊட்டச்சத்து நிபுணர்


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick