டாக்டர் நியூஸ்!

தகவல்

சாக்லேட் கசக்கும், அதுதான் நல்லது!

சா
க்லேட் நிறைய சாப்பிடுபவர்களைப் பார்த்து ‘இது கெட்ட பழக்கமாச்சே...’ , `சாக்லேட் சாப்பிட்டா பல்லு கெட்டுப்போறது மட்டுமில்ல, உடம்பும் குண்டாகிடும்!’ என்று சொல்பவர்களே அதிகம். ஆனால், சாக்லேட்டில் நிறைய நன்மைகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, அதிலுள்ள ஃபிளேவனாய்டுகள் மூளை மற்றும் இதயத்துக்கு நல்லது என்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே சாக்லேட் சாப்பிட்டால் மனிதர்களுக்கு நன்மை கிடைக்குமா என்பதுபற்றிச் சமீபத்தில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.

லோமா லிண்டா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுகளின்படி 70 சதவிகிதம் கோக்கோ, 30 சதவிகிதம் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை கொண்ட சாக்லேட் மனிதர்களின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, மனநிலையை மேம்படுத்துகிறது. நினைவாற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது. உடனே கடைக்கு ஓடிச்சென்று சாக்லெட்டுகளை வாங்கிக் குவிக்க வேண்டாம். இன்றைக்கு விற்கப்படும் பெரும்பாலான சாக்லேட்டுகளில் கோக்கோ சதவிகிதம் குறைவுதான், சர்க்கரையைத்தான் ஏராளமாகக் கொட்டிவைத்திருக்கிறார்கள். இந்த ஆய்வின்படி கோக்கோவின் சதவிகிதம் அதிகமாக இருந்தால்தான் அந்த சாக்லேட் நமக்கு நல்லது. ஆகவே, ‘டார்க் சாக்லெட்’ என்று கேட்டு வாங்குங்கள். கொஞ்சம் கசக்கும், சாப்பிடச் சாப்பிட அந்தச் சுவையும் பிடித்துவிடும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick