பிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் உண்டு! - ஆனந்தம் விளையாடும் வீடு - 2 | A Guide for First Time Parents - Doctor Vikatan | டாக்டர் விகடன்

பிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் உண்டு! - ஆனந்தம் விளையாடும் வீடு - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

ரு குழந்தை பிறந்தவுடனேயே அதற்கு ஏதாவது உடல்நலக் கோளாறு என்றால், அது பிரசவித்த பிறகுதான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும்போதேகூட வந்திருக்கலாம். அதாவது, குழந்தை வயிற்றில் இருக்கும்போதே அதற்கு இதயக்கோளாறு, குடலிறக்கம், அதிக எடை, எடைக் குறைவு போன்ற பிரச்னைகள் வரலாம். அடுத்து, அம்மாவுக்கு டயாபடீஸ், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தால் அது குழந்தையின் ஆரோக்கியத்திலும் எதிரொலிக்கும். இவை தவிர, குழந்தை, தாயின் வயிற்றில் இருந்து வெளியே வருகிற நேரத்தில் நஞ்சுக்கொடி பிரிதல், குழந்தைக்கு இதயத்துடிப்பு அதிகமாதல்/குறைதல் போன்ற பிரச்னைகள் வரலாம். இத்தனை பிரச்னைகளிலிருந்தும் அந்த சிசுவைக் காப்பாற்றுவதற்காகத்தான், பிரசவ நேரத்தில் பச்சிளம் குழந்தை நிபுணர் ஒருவரும் உடன் இருப்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick