இது பெற்றோர்களுக்கான பாடம் - பள்ளிக்கூடம் அனுப்புகிறவர்களின் கவனத்துக்கு

கோபாலகிருஷ்ணன், குழந்தைகள்நல மருத்துவர்ஹெல்த்

“இன்றைய குழந்தைகள் இரண்டு வயதிலேயே ப்ளே ஸ்கூலில் சேர்க்கப்படுகின்றனர். இரண்டரை வயது முதல் கேஜி வகுப்புகளில் அனுமதிக்கப் படுகின்றனர். பள்ளி அட்மிஷனுக்கு முன்பாக, அந்தப் புதிய சூழலுக்கு அவர்களால் ஈடுகொடுக்க இயலும் அளவுக்கு அவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்’’ என்கிறார், பவானியைச் சேர்ந்த அரசு குழந்தைகள்நல மருத்துவர் கோபாலகிருஷ்ணன். அதற்காக அவர் தந்த முழுமையான வழிகாட்டல் இங்கே...

உடல்நலனில் செக் பாயின்ட்ஸ்

* பள்ளியில் சேர்ப்பதற்கு முன்புவரை, வீட்டில் பெற்றோரின் கண்காணிப்பில் பாதுகாப்பான வட்டத்திலேயே குழந்தைகள் வளர்ந்திருப்பார்கள். பள்ளியில் பலதரப்பட்ட மாணவர்களுடனும் சேர்ந்திருக்க நேரும்போது, உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் மூலம் மற்ற குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படலாம். எனவே, முதலில் குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனை வலுவாக்க வேண்டும்.

* மாணவர் சேர்க்கையின்போது பெரும்பாலான பள்ளிகளில் மருத்துவப் படிவம் ஒன்றைத் தருவார்கள். அதில், குழந்தையின் எடை, உயரம், ரத்த வகை, பார்வைத் திறன், கேட்கும் திறன், அலர்ஜி ஏதேனும் இருக்கிறதா, மருத்துவமனையில் எதற்காகவாவது நீண்ட நாள் சிகிச்சை பெற நேர்ந்திருக்கிறதா, வலிப்பு இருக்கிறதா, மூச்சிரைப்பு இருக்கிறதா, தொற்றுநோய் இருக்கிறதா, சருமப் பிரச்னைகள் உள்ளனவா, எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொள்ளலாமா, ஏற்றுக்கொள்ளாத உணவுகள், மருந்து மற்றும் மாத்திரைகள் எனக் குழந்தையைப் பற்றிய முழு மருத்துவ விவரங்களையும் கேட்பார்கள். இதைப் பெற்றோர் பூர்த்திசெய்வதுடன், சில குழந்தைகளுக்கு, தேவைப்படும் பட்சத்தில், மருத்துவ அறிக்கை/சான்றிதழும் பெற்றுவரச் சொல்லிக் கேட்கப்படலாம். பள்ளியில் குழந்தைக்கு ஏதாவது உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக உரிய சிகிச்சையை அளிக்கவும், ஒரு குழந்தையின் பாதிப்பு மற்ற குழந்தைகளைப் பாதிக்காமல் தவிர்ப்பதற்கும் கோரப்படும் விவரங்கள் இவை. எனவே, இந்தப் படிவங்களை சம்பிரதாயமாகப் பார்க்காமல், முழு ஈடுபாட்டுடன் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick