பார்வைக்கோளாறுகள் போக்கும் முருங்கைப்பூ

திவ்யா, சித்த மருத்துவர்

முருங்கை நிறைய மருத்துவக் குணங்களைக்  கொண்டது.  குறிப்பாக, முருங்கைப் பூ மகத்துவமானது.

* முருங்கைப் பூ , பித்தத்தைக்  குறைத்து, உடல் அசதியைப் போக்கிப் புத்துணர்ச்சி தரக்கூடியது. அதில், கால்சியம், பொட்டாசியம், அமினோ அமிலங்கள், ஆல்கலாய்டு மற்றும்  ஃபிளேவனாய்டுகள் (Flavanoids) உள்ளன.

* முருங்கைப்பூவை பால், ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவைத்து  நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இல்லறம் சிறக்கும். இதை 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

* முருங்கைப்பூவை பாலில் வேகவைத்துச் சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்; நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்; ஆண்மை சக்தி அதிகரிக்கும்; வெள்ளைப்படுதல் குணமாகும். கருப்பை வலுப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick